ச சட்ட உதவி ramanathan venkataraman < ramugiri17@gmail.com > Dec 28 (3 days ago) இலவச சட்ட உதவி யார் யாருக்கு பொருந்தும்???.. பணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையினால் எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 39-A வலியுறுத்துகின்றது. ஒரு அரசின் கடமை, அதன் குடிமக்கள் அனைவரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கிட உறுதி செய்ய வேண்டும் என்பதே என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 14 மற்றும் 22(1) வலியுறுத்துகின்றது. குற்றவியல் நடைமுறை 304 இன் படி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவியல் நடுவர் முன் நிறுத்தப்படும் அந்த நேரத்தில் இருந்தே, அவருக்கு பண வசதி இல்லாத நிலையில் சட்ட உதவி வழங்கிட வேண்டும் என்றும், பின் எப்போதெல்லாம் அந்த குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நீட்டிக்கப்படுகின்றதோ, சட்ட உதவி ...
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
"உங்களுக்கு என்ன அண்ணே!!பிள்ளை பொண்ணுக்கு கல்யாணமெல்லாம் முடிஞ்சு போச்சு, வேறென்ன கவலை.'.. "ம்"என்று தலையை ஆட்டினேன். "பேரன் பாத்திட்டிங்க." "அப்புறம்" "அண்ணிக்கு மட்டும் கொஞ்சம் உடம்பு சரியில்லே அவ்வளவுதானே' என்றான் எதிரில் உட்கார்ந்டிருந்த கண்ணன். இருபது வருட சினிமா தொழன். உதவி இயக்குனராகவே இருபது வருடமாக இருப்பவன். "புரட்யூசர் கிடைச்சிட்டாருன்னே அடுத்தமாசம் படத்த ஆரம்பிச்சுடலாம்னே' என்று இவன் சொல்லி பல வருடங்கள் காணாமல் போனது. "அண்ணிக்கு சாதாரன ஆப்பரெஷன் கிடையாதுடா." என்றேன்." தலையை ஆட்டிக்கொண்டே அடுத்த ரவுண்டை உள்ளே தள்ளியவன் அந்த பாரிலிருந்து புறப்பட தயாரானான். "அண்ணே! எம் பொண்டாட்டி அண்ணிமாதிரி இல்லே." அடுத்த நிமிடம் காணாமல் போனான். இவ்வளவு நாள் கழித்து இங்கு வந்தது மனதுக்குஆறுதல் ஒரு பக்கம் இருந்தாலும் மனது படபடக்கத்தான் செய்த்து. கல்யாணம் ஆன நாளிலிருந்தே எல்லாம் அவள் பார்த்து செய்ததுதான். மகனும், மகளும் வளர்ந்தது, படித்தது இதுவரை எனக்கு தெரியாத ஒன்று. யாராவது என்னை ...